News August 5, 2025
கோவையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை, வேளாண் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்ப்பில், தேனி வளர்க்க நாளை ஒருநாள் (ஆக.6) பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தேனி இனங்களை கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News August 5, 2025
கோவை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

கோவையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News August 5, 2025
கோவை: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள், <
News August 4, 2025
ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம்!

கோவையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்துள்ளார். மாநகர் பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மதன் கண்ணன், அறிவழகன், கோபிநாத், அருண் குமார், சுஜி மோகன் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.