News August 5, 2025
சிராஜுக்கு மட்டும் பாரபட்சம்?

இந்திய அணியில் சிராஜுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பணிச்சுமை காரணமாக பும்ராவிற்கு அடிக்கடி ஓய்வு தரும் நிர்வாகம், சிராஜின் பணிச்சுமையை கருத்தில் கொள்ள தயங்குவதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். நடப்பாண்டில் சிராஜ் 213.3 ஓவர்கள் வீசி 27 விக்கெட்களை வீழ்த்தியதையும், பும்ரா 129.4 ஓவர்கள் வீசி 16 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Similar News
News August 5, 2025
10 சீட்.. திமுக கூட்டணியில் தேமுதிக?

திமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாம். கூட்டணி முடிவில் பிரேமலதா மிகவும் சஸ்பென்ஸாக காய்களை நகர்த்தி வருகிறார். திமுக கூட்டணியில் 9 சீட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், 12 சீட் வேண்டும் என்று பிரேமலதா அடம் பிடிக்கிறாராம். இன்னும் ஒரு சீட் கூடுதலாக கொடுக்கவும் திமுக தயாராகிவிட்டதாம். கிட்டத்தட்ட திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி என பேச்சு அடிபடுகிறது.
News August 5, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

நேற்று உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 80,585 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் குறைந்து 24,611 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மீண்டும் டிரம்ப் வரியை உயர்த்த உள்ளதாக எச்சரித்துள்ளதால் அதன் தாக்கம் பங்குசந்தையில் நிலவுவதாக கூறப்படுகிறது.
News August 5, 2025
சற்றுமுன்: நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை

ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.