News August 5, 2025

நீலகிரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

நீலகிரி ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில், பேரிடர் காலங்களில் மக்களை காக்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள 400 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. என்எஸ்எஸ் மூலமாக 100 என்சிசி மூலமாக 200, நேரு யுவகேந்திரா மூலமாக 100 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 3 வார பயிற்சி காலத்தில் உணவு, தங்குமிடம், சான்றிதழ் மீட்பு கருவிகள் வழங்கபடும்.

Similar News

News August 5, 2025

நீலகிரி: புதிய வீடு கட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற விரும்பும் பொதுமக்கள், <>www.onlineppath.gov.in<<>> என்ற இணையதளத்தில் உள்ள Single Window Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். மேலும், கட்டுமானத் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு 94427 72701 என்ற உதவி எண்களில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

நீலகிரி: அவசர தொடர்புக்கு எண்கள் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்திற்கு அதீத கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தற்போது அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, உதகை கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் 04262-261296, உதகை வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423- 2206102, கோத்தகிரி 04266-271718, குந்தா 0423- 2508123, கூடலூர் 04262-261252, பந்தலூர் 04262- 220734.

News August 5, 2025

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை; சுற்றுலா தளங்கள் நாளை மூடல்

image

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழையை அடுத்து சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் இன்று (ஆகஸ்ட் 5) ஒரு நாள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். தோட்டக்கலை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா பகுதிகள் நாளை மூடப்படும்.

error: Content is protected !!