News August 5, 2025
டேவிட் ஃபின்சரின் தரமான படங்கள்

ஹாலிவுட் இயக்குநர் டேவிட் ஃபின்சரின் படங்களுக்கு உலகளவில் எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ‘Seven’, ‘The Game’, ‘Gone Girl’ ஆகிய அவரது கிரைம் த்ரில்லர் படங்கள் பல இயக்குநர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார். 1999-ல் வெளியான ‘Fight Club’ பலரது ஃபேவரிட்டாக உள்ளது. ‘The curious case of benjamin button’ அற்புதமான உணர்வுகளை கடத்தக்கூடிய ஒரு ஃபீல் குட் படம்.
Similar News
News August 5, 2025
சற்றுமுன்: நாளை இந்த மாவட்டத்திற்கு விடுமுறை

ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
ஓரணியில் தமிழ்நாடு.. அழைப்பு விடுத்த திமுக

தமிழ்நாட்டின் உரிமை போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைய வேண்டும். நம் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஆக.11,12-ல் ஸ்டாலின், கோவை, திருப்பூரில் ஆய்வு செய்யவிருக்கும் நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
தங்கம் விலை ₹600 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ₹75 ஆயிரத்தை நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து, ₹74,960ஆகவும், கிராமுக்கு ₹75 உயர்ந்து ₹9,370ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 1-ம் தேதி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹73,200ஆக விற்பனையான நிலையில், 4 நாளில் ₹1,760 அதிகரித்துள்ளது.