News August 5, 2025

ஆடி செவ்வாயில் விரதமிருந்து வழிபட்டால் என்ன நடக்கும்?

image

ஆடி செவ்வாயில் அம்மனுக்கு செவ்வரளி, செண்பகம் போன்ற சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு. இந்நாளில் விரதமிருந்து வழிபட்டால் கடன் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும். சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசி நீராடி வழிபட்டால் கணவரின் ஆயுள் நீடிக்கும் என்றும், கன்னிப்பெண்கள் வழிபட்டால் நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதமிருந்தால், மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Similar News

News August 5, 2025

வெள்ள சர்க்கரை என்றால் கொள்ள ஆசையா?

image

டீ, காபி என்றாலே வெள்ளை சர்க்கரையை கொஞ்சம் தூக்கலாக போட்டு கொள்ளும் பழக்கம் உள்ளவரா? வெள்ளை சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கானது. உடல் எடையை அதிகரிப்பதுடன், வெள்ளை சர்க்கரை இதயத்தையும் அதிகமாக பாதிக்கிறது. இவற்றுடன் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்றவை ஏற்படும் அபாயமும் அதிகம். அடுத்தமுறை, ஒரு ஸ்பூன் தானே என சேர்க்கும் போது யோசிக்கவும்.

News August 5, 2025

விஜய்யின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தொண்டர்கள்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கூறி தேதியை மாற்ற போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து மாநாட்டை வரும் 18 முதல் 22-ம் தேதிக்குள் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாநாட்டுக்கான தேதியை இன்னும் சற்று நேரத்தில் விஜய் அறிவிக்க உள்ளார்.

News August 5, 2025

வடமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாற முடியுமா

image

வடமாநிலத்தவர்கள் அரசின் நலத்திட்டங்களையும் அனுபவிக்கின்றனர். குறிப்பாக, கல்வி, மருத்துவம் போன்ற திட்டங்கள் பிடித்துபோய் அவர்கள் இங்கேயே தங்க விரும்பி, வாக்காளர்களாகவும் மாற விரும்பினால், அதை யாராலும் தடுக்க முடியாது. இந்திய குடிமகன் நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியிருக்க, பணிபுரிய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. ஆனால், இது திட்டமிட்டு நடப்பதாக குற்றம் சாட்டினால், அதை நிரூபிக்க வேண்டும்.

error: Content is protected !!