News August 5, 2025

சிவகார்த்திகேயனின் இந்த ஒரு ஆசை நிறைவேறுமா?

image

ஒரு படம் வெற்றி அடைந்த பிறகு, அதை 2ம் பாகமாக எடுத்து, அதில் நடிக்க தனக்கு எப்போதும் பயமாக இருக்கும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆனால், ‘மாவீரன்’ படத்தில் மட்டும் 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாகவும், அப்படி ஒரு தனித்துவமான கதை அதில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார்.

Similar News

News August 5, 2025

தங்கம் விலை ₹600 உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ₹75 ஆயிரத்தை நெருங்கியதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து, ₹74,960ஆகவும், கிராமுக்கு ₹75 உயர்ந்து ₹9,370ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 1-ம் தேதி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹73,200ஆக விற்பனையான நிலையில், 4 நாளில் ₹1,760 அதிகரித்துள்ளது.

News August 5, 2025

‘கூலி’ டைம் டிராவல் படமா? லோகி சொல்வதை கேளுங்க!

image

‘கூலி’ படத்தை சயின்ஸ் ஃபிக்சன், டைம் டிராவல் படமென ரசிகர்கள் சொல்வது தனக்கே வியப்பாக இருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். படம் எதைப்பற்றியது என ரசிகர்கள் பார்த்து ஆச்சரியப்படுவதை பார்க்கவே தான் ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாகர்ஜுனாவிடம் 7 முறை கதை சொன்ன பின்னரே, அவர் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

வெள்ள சர்க்கரை என்றால் கொள்ள ஆசையா?

image

டீ, காபி என்றாலே வெள்ளை சர்க்கரையை கொஞ்சம் தூக்கலாக போட்டு கொள்ளும் பழக்கம் உள்ளவரா? வெள்ளை சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கானது. உடல் எடையை அதிகரிப்பதுடன், வெள்ளை சர்க்கரை இதயத்தையும் அதிகமாக பாதிக்கிறது. இவற்றுடன் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்றவை ஏற்படும் அபாயமும் அதிகம். அடுத்தமுறை, ஒரு ஸ்பூன் தானே என சேர்க்கும் போது யோசிக்கவும்.

error: Content is protected !!