News August 5, 2025
சீன நிறுவனங்களுடன் கைகோர்ப்பா? அதானி மறுப்பு

சீன நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் EV பேட்டரி உற்பத்தி ஆலையை தொடங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலை அதானி குழுமம் நிராகரித்துள்ளது. EV கார் உற்பத்தி நிறுவனமான BYD மற்றும் Beijing Welion New Energy Technology நிறுவனங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும், இந்த தகவல் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துவது என்றும் மறுத்துள்ளது.
Similar News
News August 5, 2025
சிராஜுக்கு மட்டும் பாரபட்சம்?

இந்திய அணியில் சிராஜுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பணிச்சுமை காரணமாக பும்ராவிற்கு அடிக்கடி ஓய்வு தரும் நிர்வாகம், சிராஜின் பணிச்சுமையை கருத்தில் கொள்ள தயங்குவதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். நடப்பாண்டில் சிராஜ் 213.3 ஓவர்கள் வீசி 27 விக்கெட்களை வீழ்த்தியதையும், பும்ரா 129.4 ஓவர்கள் வீசி 16 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
News August 5, 2025
விஜய்யுடன் கூட்டணி அமைக்க OPS தரப்பு முடிவு

BJP கூட்டணியிலிருந்து விலகிய OPS, யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில் அவரை மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க EPS-யிடம் நயினார் ஆலோசித்திருந்தார். ஆனால், OPS தரப்பை இணைக்கக்கூடாது என்பதில் EPS விடாப்பிடியாக இருக்கிறாராம். இதனால், விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து OPS தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசித்ததாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
News August 5, 2025
சரும நோய்களை தடுக்கும் பாதஹஸ்தாசனம்

✦வாதம் வராமல் தடுக்கும்.
✦10-15 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம்
✦தோல் சம்பந்தமான வியாதிகள் வராமல் தடுக்கும்
✦வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும்
✦மார்பை விரிவுப்படுத்தும்.
✦இடுப்பும், பாதமும் வலுப்பெறும்.
✦உடலை ஆரோக்கியமாக வைக்கும்.