News August 5, 2025

‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோ பாதுகாக்கப்படுமா?

image

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வணிக பயன்பாட்டிற்கு கோரும் எந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களும் இதுவரை ஏற்கப்படவில்லை என மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘Operation Sindoor’ (அ) ‘Ops Sindoor’ என்ற பெயரில் டிரேட்மார்க் கோரி, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 46 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதேவேளையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளது.

Similar News

News August 5, 2025

வெறிகொண்டு தாக்க தயாரான இஸ்ரேல்

image

காசா முழுமைக்கும் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முடிவு செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இடங்கள், அகதிகள் முகாம்கள் என மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளிலும் இனி பயங்கர தாக்குதல் நடத்தப்பட உள்ளன. இந்த தீவிர நடவடிக்கைக்கு டிரம்ப்பும் பச்சை கொடி காட்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

News August 5, 2025

டேவிட் ஃபின்சரின் தரமான படங்கள்

image

ஹாலிவுட் இயக்குநர் டேவிட் ஃபின்சரின் படங்களுக்கு உலகளவில் எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ‘Seven’, ‘The Game’, ‘Gone Girl’ ஆகிய அவரது கிரைம் த்ரில்லர் படங்கள் பல இயக்குநர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார். 1999-ல் வெளியான ‘Fight Club’ பலரது ஃபேவரிட்டாக உள்ளது. ‘The curious case of benjamin button’ அற்புதமான உணர்வுகளை கடத்தக்கூடிய ஒரு ஃபீல் குட் படம்.

News August 5, 2025

நீலகிரி, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

image

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!