News August 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News August 5, 2025
80% குணமாகும் கேன்சர் தடுப்பூசி இலவசம்!

கேன்சருக்கான தடுப்பூசியை மேம்படுத்தி வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் செல்களை கண்டறிந்து தேடி கொல்லும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தடுப்பூசி மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 75-80% வரை கேன்சர் குணமாவதாகவும், விரைவில் நாடு முழுக்க பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
News August 5, 2025
மோடி ஆட்சியில் 17 கோடி வேலைவாய்ப்பு: அமைச்சர்

கடந்த 10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கடந்த 16 மாதங்களில் மட்டும் 11 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முந்தைய UPA ஆட்சிகாலத்தில் வெறும் 3 கோடி வேலைவாய்ப்புகள் மட்டும் தான் உருவாக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News August 5, 2025
கிங்டம் படத்தை திரையிட்டால் முற்றுகை: சீமான்

‘கிங்டம்’ படத்தில் ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்களென காட்டுவது வரலாற்றுத்திரிபு என சீமான் சாடியுள்ளார். கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில் எப்படி வேண்டுமானாலும் திரித்து தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை அனுமதிக்க முடியாது என்றார். ஆகவே ‘கிங்டம்’ படத்தை தமிழகத்தில் திரையிடுவதை நிறுத்த வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளார்.