News August 5, 2025

அனுபவம் சொல்லித்தரும் பாடம்

image

*உங்களால் எல்லாரையும், எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்த முடியாது *உங்கள் சுயமதிப்பானது உங்களை சார்ந்ததே. உங்களை பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல *சிலர், சில சமயங்களில் கடுமையாக நடந்து கொள்வதற்கு நீங்கள் தான் காரணம் என்று நினைக்காதீர்கள். அவர்களின் சொந்தப் பிரச்சனையால் அவர்கள் அப்படி நடந்துகொள்ள நேரிட்டிருக்கலாம்…. உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதை கமெண்ட்டில் பகிரலாமே?

Similar News

News August 5, 2025

தீவிர தேர்தல் Mood-ல் பாஜக

image

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த வாரத்தில் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், NDA கூட்டணி கட்சி MP-களுக்கு தேர்தல் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க, உள்துறை அமைச்சக வளாகத்தில் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்துள்ளது.

News August 5, 2025

தலைமறைவாக இருந்த நடிகை கைது

image

நடிகை மீரா மிதுனை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியில் வந்த அவர், கோர்ட்டுக்கு வராமல் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய சென்னை முதன்மை கோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.

News August 5, 2025

காஷ்மீரில் வட்டமிடும் போர் விமானங்கள்.. என்ன நடக்கிறது?

image

இந்திய விமானப்படையின் போர் விமானங்களை நள்ளிரவு முதல் அடிக்கடி பார்க்க முடிவதாக காஷ்மீர் மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று அம்மாநிலம் 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட தினம் என்பதால் பாதுகாப்பு கருதி போர் விமானங்கள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படலாம் என நேற்று முதல் செய்திகள் வருவதால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!