News August 5, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக கோவை-தன்பாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (03680) நாளை (ஆக.05) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 08.25 நிமிடங்கள் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 5, 2025

சேலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

சேலம் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி, நடராஜ திருமண மண்டபம்
▶️இளம்பிள்ளை,சந்தைப்பேட்டை, மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபம்
▶️நெய்காரப்பட்டி ஸ்ரீ கிருஷ்ண மஹால்
▶️மின்னாம்பள்ளி வைஷ்ணவி திருமண மண்டபம்
▶️முத்துநாயக்கன்பட்டி, அருள் மஹால் திருமண மண்டபம்

News August 5, 2025

சேலத்தில் அமலுக்கு வரும் தாழ்தளப் பேருந்துகள்

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டத்திற்கு 25 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து இன்னும் ஓரிரு வாரத்தில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் சாலையில் ஸ்பீடு பிரேக் இல்லாமல் இருக்க வேண்டும். அதுபோன்ற இடத்தை தேர்வு செய்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

News August 5, 2025

சேலம்: டிக்கெட்டின்றி பயனித்தவர்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

image

சேலம்: ரயில்வே கோட்டப் பகுதிகளில் கடந்த ஜூலை மாதத்தில் ரயில்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் டிக்கெட்டின்றி பயணித்த 23,286 பயணிகளிடம் இருந்து ரூ.1.59 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!