News April 6, 2024
“இந்தியன் -2” ரிலீஸ் எப்போது?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் -2” திரைப்படம் ஜூன் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, டீசர் அல்லது டிரெய்லர் தொடர்பான அப்டேட்டும் வெளியாக வாய்ப்புள்ளது.
Similar News
News March 20, 2026
தவெக ஒரு பால்வாடி இயக்கம்: சேகர்பாபு

தவெகவை அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். பேய், பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படும் இயக்கம் திமுக அல்ல என்ற அவர், கூவி கூவி அழைத்தும் யாரும் அவர்களுடன் (தவெக) கூட்டணிக்கு வரவில்லை என்று சாடினார். பால்வாடி இயக்கத்திற்கு பவளவிழா இயக்கம் பாடம் புகட்டும் என்று சேகர்பாபு விமர்சித்துள்ளார். மேலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை திமுகவுக்கு எதிரிகளே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
News March 20, 2026
தொகுதி உடன்பாட்டில் தாமதம்… முடிவு யார் கையில்?

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி உடன்பாடு இதுவரை எட்டப்படவில்லை. கடந்தவாரம் பியூஷ் கோயல் வந்துசென்றார். இப்போது EPS டெல்லி சென்றுள்ளார். TTV, அன்புமணியும் கூட டெல்லி சென்றுள்ளனர். கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் எனில், உடன்பாடு காண ஏன் அனைவரும் டெல்லி செல்கின்றனர். தொகுதி ஒதுக்கீட்டை EPS முடிவு செய்கிறாரா அல்லது பாஜக முடிவு செய்கிறதா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News March 20, 2026
CINEMA 360: மணிரத்னம் இயக்கத்தில் VJS- சாய் பல்லவி!

*விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் *முதல் நாளிலேயே கென் கருணாஸின் ‘யூத்’ படம் ₹4 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம் *‘தலைவர் 173’ படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் 20-ம் தேதி தொடங்குகிறதாம் *சூர்யாவைப் பின்பற்றி ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கவுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.


