News August 4, 2025
கள்ளக்குறிச்சியில் 8 உதவி ஆய்வாளர்கள் ஆய்வாளராக பணி உயர்வு

தமிழ்நாடு முழுவதும் இன்று 280 காவல் உதவி ஆய்வாளர்கள் தர நிலை உயர்வு உயர்த்தி காவல் ஆய்வாளர்களாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரஞ்சரம், கீழ்குப்பம், எடைக்கல், கரியாலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, எலவனாசூர்கோட்டை, மணலூர்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராக பணியாற்று வரும் காவலர்கள் ஆய்வாளர்களாக பதிவு உயர்வு அடைந்துள்ளனர்.
Similar News
News August 6, 2025
கள்ளக்குறிச்சியில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (04151-228802) நேரடியாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!
News August 6, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்! கை நிறைய சம்பளம்

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <
News August 6, 2025
கள்ளக்குறிச்சி சி.இ.ஓ புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் இந்த கல்வி ஆண்டிற்கான கலைத் திருவிழாக்களை நடுத்திட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சி.இ.ஓ கார்த்திகா சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார்.