News August 4, 2025

விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் 3 இடங்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் மண்டல அளவிலான போட்டியிலும், பின்னர் மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள். இப்போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்வதற்கான க்யூஆர் கோடினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டார்.

Similar News

News August 23, 2025

அரியலூர்: ITI போதும் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

அரியலூர்: இலவச சட்ட உதவி மையம் திறப்பு

image

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இலவச சட்ட உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இது புதன்கிழமை தோறும் செயல்படும். இதனை முன்னாள் படை வீரர்கள் பயன்படுத்தி தங்களின் பிரச்சினைகளுக்கு இலவச சட்ட உதவியை பெறலாம். மேலும், 24 மணி நேரமும் சட்ட உதவி பெற இலவச எண் 15100 என்பதை அழைக்கலாம் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர்வாலண்டினா அறிவுறுத்தியுள்ளார். SHARE IT..

News August 23, 2025

ஜெயங்கொண்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சியில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் (23.8.2025) சனிக்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, விளந்தையில் நடைபெற உள்ளது. ஆகவே அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த முகாம்களில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!