News August 4, 2025
சாதித்தது இளம் படை: தொடரை சமன் செய்தது இந்தியா

ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாமல் சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய இளம் டெஸ்ட் அணிக்கு தொடக்கமே சூப்பராக அமைந்திருக்கிறது. கை நழுவிப் போனதாக எண்ணிய தொடரை, கடைசி டெஸ்ட் கடைசி நாளில் தலைகீழாக மாற்றி இருக்கிறது இந்த இளம் படை. 5-வது டெஸ்டில் த்ரில் வெற்றிபெற்றதன் மூலம் 2 -2 என்ற கணக்கில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் சமனில் நிறைவடைந்துள்ளது.Well done boys..!
Similar News
News August 5, 2025
ராசி பலன்கள் (05.08.2025)

➤ மேஷம் – வரவு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – நன்மை ➤ கடகம் – உதவி ➤ சிம்மம் – சுபம் ➤ கன்னி – வாழ்வு ➤ துலாம் – கவனம் ➤ விருச்சிகம் – நலம் ➤ தனுசு – பயம் ➤ மகரம் – லாபம் ➤ கும்பம் – ஜெயம் ➤ மீனம் – புகழ்.
News August 5, 2025
இருவருக்கு தொடர் நாயகன் விருது: காரணம் என்ன?

ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் ஹாரி ப்ரூக், சுப்மன் கில் தொடர் நாயகர்களாக தேர்வாகினர். இந்நிலையில் இருவீரர்கள் தேர்வானதற்கான காரணம் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாகவே இத்தொடரில் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்கள் எதிரணி பயிற்சியாளரால் தேர்வு செய்யப்படுகிறார்கள் . அதன்படி இங்கி., பயிற்சியாளர் மெக்கல்லம் கில்லையும், கம்பீர் புரூக்கையும் தேர்வு செய்துள்ளனர்.
News August 4, 2025
மாணவர்களுக்கு வாரந்தோறும் தேர்வு நடத்த உத்தரவு

அரசு பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரந்தோறும் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் மொழிப்பாடம், கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் மூலம் 6 மாத பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அந்தந்த வாரம் நடத்தப்படும் பாடத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களே, ரெடியா!