News August 4, 2025
நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லி போலீசாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன் அங்குள்ள அரசு காப்பகத்தில் இருப்பதாக போலீஸ் கூறியுள்ளது. அவரை கைது செய்து ஆகஸ்ட் 11-ல் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 4, 2025
பெட்ரோல், டீசல் விலை உயரலாம்

அமெரிக்காவின் தடையை ஏற்று, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியாவுக்கு ஆண்டுக்கு ₹80,000 கோடி முதல் ₹97,000 கோடி வரை கூடுதல் செலவாகலாம். பிற நாடுகளிடம் எண்ணெய் வாங்கும்போது ஒரு பேரலுக்கு குறைந்தது ₹438 கூடுதலாக செலவாகும். இது மேலும் உயரலாம். இதனால் உள்நாட்டிலும் விலை உயரும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்து பொருள்கள், சேவைகள் விலை உயரும். இந்தியா என்ன செய்ய வேண்டும்?
News August 4, 2025
நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை..!

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் நாளை(ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே, பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 7-ம் தேதி சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். SHARE IT.
News August 4, 2025
குறட்டை விட்டு தூங்குபவரா…. மருத்துவர்கள் எச்சரிக்கை!

உறக்கத்தின் நடுவே மூச்சுத்திணறலுடன், குறட்டையை உண்டாக்குவது ஸ்லீப் ஆப்னியா என்னும் தூக்கக் குறைபாடு. இதில் அப்ஸ்ட்ரக்டிவ் ஆப்னியாவால்(OSA) பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உறக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசம் தடைபடும். இவர்கள் போதுமான நேரம் தூங்கி எழுந்தாலும், காலையில் உடல்சோர்வை உணர்வார்கள். இந்த பிரச்னை உள்ள ஆண்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என லேட்டஸ்ட் ஆய்வு எச்சரிக்கிறது.