News April 6, 2024

ஒரே ஆண்டில் தங்கம் விலை சவரனுக்கு ₹7,720 உயர்வு

image

1 கிராம் தங்கம் விலை கடந்த 2023 ஏப்ரல் 6ஆம் தேதி ₹5,650ஆகவும், 1 சவரன் தங்கம் ₹45,200ஆகவும் இருந்தது. அதன் பிறகு கடந்த ஓராண்டில் இது படிப்படியாக அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு வருடத்தில் கிராமுக்கு ₹965 அதிகரித்து, இன்று ₹6615ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சவரன் தங்கம் விலை ₹7,720 உயர்ந்து ₹52,920ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் கிராமுக்கு ₹705ம், சவரனுக்கு ₹5,640ம் உயர்ந்துள்ளது.

Similar News

News August 25, 2025

‘நீங்கா நினைவில் வாழும் அண்ணன்’.. விஜய் வாழ்த்து

image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை நினைவுகூர்ந்து திரையுலகினரும், அரசியல் கட்சியினரும் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயகாந்த் பற்றி தவெக தலைவர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நீங்கா நினைவில் வாழும் அண்ணன், புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

ஆண்களுக்கு உதவும் சட்டங்கள்.. நோட் பண்ணிக்கோங்க!

image

குடும்ப தகராறுகளில் பாதிக்கப்படும் ஆண்களுக்காக உதவும் BNS சட்டங்கள்:
◆115(2): ஒரு பெண், ஆணுக்கு உடல் ரீதியாக துன்புறுத்தலை கொடுத்து கொடுமைப்படுத்தியது நிரூபணமானால், ஒரு வருட சிறையும், ₹10,000 அபராதமும் விதிக்கப்படும்.
◆206: ஆணுக்கு எதிராக குடும்ப தகராறில், பெண் பொய் சாட்சி அளித்தது நிரூபிக்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

News August 25, 2025

10 மாசமா EMI கட்டவில்லை.. ரவி மோகன் பங்களா ஜப்தி?

image

சென்னை ECR-ல் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பங்களாவுக்காக பெற்ற கடன் தொகையின் EMI-யை 10 மாதங்களாக அவர் கட்டாததன் காரணமாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரியர் பாய் கொண்டு சென்ற நோட்டீஸை வாங்காமல், வங்கியில் வந்து நோட்டீஸ் பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் தரப்பு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!