News April 6, 2024

திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்

image

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) சற்றுமுன் காலமானார். நேற்று முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததால் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இச்செய்தியை கேட்ட உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விழுப்புரத்திற்கு விரைந்துள்ளனர்.

Similar News

News August 25, 2025

ஆண்களுக்கு உதவும் சட்டங்கள்.. நோட் பண்ணிக்கோங்க!

image

குடும்ப தகராறுகளில் பாதிக்கப்படும் ஆண்களுக்காக உதவும் BNS சட்டங்கள்:
◆115(2): ஒரு பெண், ஆணுக்கு உடல் ரீதியாக துன்புறுத்தலை கொடுத்து கொடுமைப்படுத்தியது நிரூபணமானால், ஒரு வருட சிறையும், ₹10,000 அபராதமும் விதிக்கப்படும்.
◆206: ஆணுக்கு எதிராக குடும்ப தகராறில், பெண் பொய் சாட்சி அளித்தது நிரூபிக்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

News August 25, 2025

10 மாசமா EMI கட்டவில்லை.. ரவி மோகன் பங்களா ஜப்தி?

image

சென்னை ECR-ல் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பங்களாவுக்காக பெற்ற கடன் தொகையின் EMI-யை 10 மாதங்களாக அவர் கட்டாததன் காரணமாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரியர் பாய் கொண்டு சென்ற நோட்டீஸை வாங்காமல், வங்கியில் வந்து நோட்டீஸ் பெற்றுக் கொள்வதாக கூறி ரவி மோகன் தரப்பு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

News August 25, 2025

ரேஷன் கார்டு.. தமிழக அரசு குட் நியூஸ்!

image

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். எப்படி தெரியுமா? www.tnpds.gov.in இணையதளத்தில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில், கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். 30 – 45 நாள்களில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கும். SHARE IT.

error: Content is protected !!