News July 11, 2025
ஆன்லைன் மோசடி – முதலில் என்ன செய்ய வேண்டும்?

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு 1907 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் இணைய மோசடிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தவுடன், உடனடியாக உங்கள் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்கை பிளாக் செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 அழைக்கலாம். மக்களே SHARE பண்ணுங்க!
Similar News
News September 11, 2025
நாமக்கல்லில் கல்வி கடன் முகாம்

நாமக்கல் கோட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டிற்கான கல்வி கடன் வழங்குவதற்கான முகாம் மாரப்பநாயக்கன்பட்டி கிராமம், சி.எம்.எஸ் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் வருகிற செப்.20ஆம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணிவரை நடைபெற உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
நாமக்கல்லில் இனி இது கட்டாயம்!

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமத்தை மாநகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், நாய்களை தெருவில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
News September 11, 2025
நாமக்கல் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிவதால், அவற்றை பிடிப்பதற்காக மாநகராட்சி சார்பில் தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிலர் பணியாளர்களை நாய்களை பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து, நாய்களை பிடிப்பவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.