News April 6, 2024
அரக்கோணம்: தனி வட்டாட்சியர் மாரடைப்பால் உயிரிழப்பு

அரக்கோணம் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக கந்திர்பாவை (58) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் வீடியோ கண்காணிப்பு குழு அலுவலராக இருந்தார். இந்நிலையில் நேற்று(ஏப்.5) பணி நேரம் முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
Similar News
News February 19, 2026
அறிவித்தார் ராணிப்பேட்டை கலெக்டர்!

ராணிப்பேட்டை வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (பிப்.20) காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில், தகுதியுள்ள இளைஞர்கள் தங்கள் சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பைப் பெறலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பாண்ணுங்க!
News February 19, 2026
அரக்கோணத்தில் தூக்கி வீசப்பட்டு பலி!

அரக்கோணம், தணிகை போளூர் ரயில்வே கேட்டில் நேற்று (பிப்.18) தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி இறந்த கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில் இறந்தவர் அப்பகுதியை சேர்ந்த கீதா (70) என்பது தெரிய வந்தது.
News February 19, 2026
ராணிபேட்டையில் பிஞ்சு குழைந்தை துடித்துடித்து பலி!

ஆற்காட்டை சேர்ந்த தம்பதி பாபு- மேகலா. இவர்களது மகன் லட்சன் (3). மேகலா நேற்று (பிப்.18) தான் வேலை செய்து வந்த செய்யாறு கருப்பசாமி கோயிலுக்கு லட்சனை அழைத்து சென்றார். அப்போது கழிப்பிடம் சென்று விட்டு வந்து பார்த்தபோது லட்சன் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்தான். ஆற்காடு அரசு மருத்துவமனையில் அவன் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசர் விசாரித்து வருகின்றனர்.


