News April 6, 2024

சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு

image

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News April 21, 2025

பிஎம் இன்டர்ன்சிப் திட்டம்: நாளையே கடைசி

image

படித்த வேலையில்லா இளைஞர்களை தேர்வு செய்து, தனியார் நிறுவன பங்களிப்புடன் அவர்களுக்கு மத்திய அரசு ஓராண்டு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கிறது. அப்போது மாதம் தலா ரூ.5,000, ஒரு முறை மட்டும் ரூ.6,000 மத்திய அரசு அளிக்கிறது. இதற்கு <>https://pminternshipscheme.com/ <<>>இணையதளத்தில் பதிவு நடைபெற்று வருகிறது. நாளையுடன் இந்த பதிவு நிறைவடையவுள்ளது. SHARE IT.

News April 21, 2025

REWIND: தமிழ் கவிஞர் பாரதிதாசன் மறைந்த நாள்

image

தமிழ் இலக்கிய உலகில் மிகவும் போற்றப்படுபவர்களில் பாரதிதாசனும் ஒருவர். பெண்கள் விடுதலை,அழகின் சிரிப்பு, குயில் பாடல்கள் என பாரதிதாசன் படைத்த படைப்புகள் இன்றும் அவர் புகழ் பாடுகின்றன. பாரதியாரின் வழியில் அவரை அடியொற்றித் துடித்தெழுந்து தொண்டாற்றியவர் பாரதிதாசன். அவரின் பெயரையே தனது பெயராகவும் அவர் மாற்றிக் கொண்டார். கடந்த 1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இதே நாளில்தான் அவர் இன்னுயீர் நீத்தார்.

News April 21, 2025

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாளில் குளறுபடி உள்ளதால், ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில், 4-வது கேள்வியின் இரண்டு வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இந்த கேள்வியை மாணவர் அட்டென்ட் செய்திருந்தால் ஒரு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!