News July 10, 2025
KGF-க்கு பிறகு இப்படி ஒரு எண்ணம் உள்ளது: Sam CS

KGF படத்துக்குப் பிறகு, இசையை சத்தமாக வைத்தால் காட்சி தப்பித்துவிடும் என்ற ஒரு எண்ணம் இருப்பதாக சாம் CS கூறியுள்ளார். இவரது இசை சத்தமாகவும், இரைச்சலாகவும் உள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதற்கு ‘ட்ரெண்டிங்’ பட விழாவில் பதிலளித்த அவர், ஒரு படத்திற்கு இசையமைத்த பிறகு சவுண்ட் எஃப்க்ட்ஸ், வசனங்களை வைத்து ஒரு Output வரும், அதற்கும் இசையமைப்பாளர்களுக்கும் சம்பந்தமில்லை என்றார்.
Similar News
News July 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News July 11, 2025
உ.பி.,யில் ₹4,320 கோடிக்கு மதுபான உற்பத்தி ஒப்பந்தம்

உ.பி.,யில் நேற்று நடைபெற்ற மதுபான உற்பத்திக்கான முதலீட்டு மாநாட்டில் ₹4,320 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேநேரம், 2024-25 நிதியாண்டில் மது விற்பனை மூலம் ₹52,570 கோடி வருமானத்தை அம்மாநிலம் ஈட்டியுள்ளது. அரசே மது விற்பனை செய்வதாக பாஜகவினர் தமிழக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில், உ.பி.,யில் நடைபெற்ற மது உற்பத்தி மாநாட்டை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
News July 11, 2025
No Backbenchers… சினிமாவால் பள்ளிகளில் நிகழ்ந்த மாற்றம்

‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற மலையாள படம் கேரள பள்ளிகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. தற்போது வழக்கத்தில் உள்ள வரிசை அமர்வு முறை, மாணவர்களின் கல்வியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அப்படம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இதன் தாக்கத்தால் பல பள்ளிகளில் அரை வட்ட அமர்வு வகுப்பு முறை பின்பற்ற தொடங்கியுள்ளனர். மலையாள சினிமா வேற லெவல்…