News July 10, 2025
ராமநாதபுரத்தில் நேற்று 574 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 9) நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தையொட்டி 7 இடங்களில் நடைபெற்ற மறியலில் 185 பெண்கள் உட்பட 574 பேர் கைது செய்யப்பட்டனர். 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியு இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. ராமநாதபுரம், பரமக்குடி, சிக்கல், திருவாடானை, சாயல்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
Similar News
News July 10, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஜூலை-10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
News July 10, 2025
ராமநாதபுரம்: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 10, 2025
11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

ராமநாதபுரத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மணிகண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், பின்னர் ஜாமினில் விடுவித்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று (ஜூலை.09), வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.கீதா ஆஜரானார்.