News April 6, 2024
பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை பார்க்கும் திமுக

பழனியில் ஆதி திராவிட மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் காயமடைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை, தமிழகம் முழுவதுமே ஆதி திராவிடர் நலப் பள்ளிகளும், விடுதிகளும் மோசமான நிலையில் தான் உள்ளன. உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, பள்ளிக் குழந்தைகளிடம் தீண்டாமை பார்ப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், மாணவிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.
Similar News
News November 11, 2025
தஞ்சை மக்களே, முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர், <
News November 11, 2025
BREAKING: பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) காலமானார். உடல்நலக்குறைவால் மும்பையின் பிரீச் கேண்டி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக India Today செய்தி வெளியிட்டுள்ளது. 1960-ல் வெளியான ‘Dil Bhi Tera Hum Bhi Tere’ படத்தில் அறிமுகமான அவர், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
News November 11, 2025
விஜய் கட்சியில் இருந்து விலகினார்

தவெகவின் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் அஜய், சீமான் முன்னிலையில் நாதகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் நாதகவில் இணைந்துள்ளனர். மேலும், தவெகவில் உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிப்பில்லை, ஒருங்கிணைப்பு இல்லை எனவும் அஜய் குற்றம்சாட்டியுள்ளார். <<18239770>>பல மாவட்டங்களில்<<>> பொறுப்புக்கு பணம் வாங்கப்படுவதாக தவெக மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.


