News July 10, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் 1,100 கட்டுமான தொழிலாளர்களுக்கு கார்பென்டர், தச்சு, மின் பணியாளர் உள்ளிட்ட 12 தொழில்களில் 7 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பயிற்சிக்காலத்தில் ரூ.800 ஊதியம், இலவச உணவு மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். விரும்புவோர் தொழிலார் நலவாரியத்தை அணுகலாம்.
Similar News
News July 11, 2025
44.5 கோடி ரூபாய் கையாடல் மேலாளர் தற்கொலை

புழல் பிரிட்டானியா நகர் திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி (37) மூன்று வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார் அவர் 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்து விட்டதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக நிறுவன சட்ட ஆலோசகர்கள் கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நவீன் நேற்று தூக்கிட்டு உயிரிழந்ததால் புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
News July 10, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் 99 தேர்வு மையங்கள்

தேர்வு-தொகுதி IV பதவிகளுக்கான தேர்வு 12.07.2025 முற்பகல் நடைபெறவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 99 தேர்வு மையங்களில் உள்ள 126 தேர்வு கூடங்களில் 38,117 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், தேர்வில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும் பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்றுநபர் தனி அறைகள் கொண்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தகவல்.
News July 10, 2025
புது மாப்பிள்ளை தற்கொலை

ஆவடி ரயில் நிலையம் மேம்பாலத்தில் நேற்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஐ.டி., ஊழியரான தீனதயாளன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் மனைவி வேறொரு நபருடன் தொடர்பில் இருந்ததால் தன் தாயிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெருசோகத்தை ஏற்படுத்தியுள்ளது.