News July 10, 2025

கணவர் மடியில் உயிரிழந்த மனைவி

image

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமநாதன் தெய்வானை தம்பதியினர் குற்றாலத்திற்கு சென்றுள்ளனர். அங்கு குளித்து விட்டு நடந்து செல்லும் பாதையில் அமர்ந்திருந்த பொழுது உடற்சோர்வு காரணமாக கணவர் மடியில் தெய்வானை சாய்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென கணவர் மடியிலேயே தெய்வானை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 7, 2025

புதுகை: நெல் மூட்டைகள் அனுப்பும் பணி

image

திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுகைக்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் வந்த 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கடையாத்துப்பட்டி மற்றும் துளையானூர் பகுதிகளில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் கிடங்கிற்கு அனுப்பபடுகிறது.

News November 7, 2025

புதுகை: திருமணத்திற்கு தங்கம் வேண்டுமா?

image

புதுகை மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

புதுகை: அமைச்சர்கள் ஆய்வு

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர்-10 தேதி அன்று புதுகை மாவட்டத்திற்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை முன்னிட்டு கீரனூர் கல்லூரி பகுதியில் இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.ரகுபதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!