News July 10, 2025

கோவையில் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை

image

கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இரண்டு நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கோவையில் அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவையில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை, எனினும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Similar News

News July 10, 2025

BREAKING: கோவை வெடிகுண்டு வழக்கில் முக்கிய நபர் கைது

image

1998-ல் கோவையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சத்தீஸ்கரில் தலைமறைவாக இருந்த சாதிக் ராஜா என்பவரை போலீசார் தற்போது கைது செய்தனர். வெடிகுண்டு வழக்கு தொடர்பாக முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதால், காவலர்கள் உஷார் நிலையில் இருக்க கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News July 10, 2025

ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். (<<17014173>>மேலும் தகவலுக்கு<<>>)

News July 10, 2025

ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு (2/2)

image

▶️ ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
▶️ விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை)
▶️ விபத்தினால் மரணம்/ நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000.
▶️ விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமச்சடங்கு செய்ய ரூ.5000 வரை.

error: Content is protected !!