News July 10, 2025
சமூக நல்லிணக்க விருது; ஆட்சியர் அறிவிப்பு

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்கப்படுத்தவும் கௌரவ படுத்துவதற்கும் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ.1 கோடி வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதை பெற தகுதியான புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்புத்துள்ளார்.
Similar News
News July 10, 2025
புதுகையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை (ஜூலை 11) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், காலை 10 முதல் 15 மேற்பட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கேற்கும். இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 10ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார். இதை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்..!
News July 10, 2025
புதுகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News July 10, 2025
புதுக்கோட்டை : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை விஏஓ-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க