News July 10, 2025

கன்னியாகுமரியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

image

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வங்கி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Similar News

News July 10, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் மட்டம் விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை10) நீர்மட்ட விவரம் : பேச்சிப்பாறை அணை – 41.81 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 70.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 13.28 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 13.38 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 406 கனஅடி, பெருஞ்சாணிக்கு 164 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News July 10, 2025

குமரி: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

குமரி மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04652227339 ) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News July 10, 2025

படித்த இளைஞர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி

image

குமரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் நான் முதல்வன் / பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் Eco Tourism & Hospitality Executive and Tourist Guide பயிற்சி வகுப்புகள் காளிகேசம் சூழலியல் சுற்றுலா தலத்தில் 11.07.2025 முதல் 30 நாட்கள் 200 மணி நேரம் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்று குமரி கலெக்டர் தெரிவித்துள்ளார். பயனுள்ள இந்த தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!