News July 10, 2025

இறந்த மாட்டை கிணற்றுக்குள் வீசி சென்ற உரிமையாளர்

image

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரத்தில் மானாமதுரை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பயன்படாத சமுதாய கிணற்றுக்குள் உரிமையாளர் பெயர் தெரியாத சுமார் ஐந்து வயது மதிப்புள்ள பசுமாடு ஒன்று கால்கள் கட்டப்பட்டு இறந்த நிலையில் போடப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Similar News

News July 10, 2025

தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

சிவகங்கை மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04575-240222) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News July 10, 2025

விபத்தில் ஊராட்சி செயலாளர் பலி

image

மானாமதுரை அருகே உள்ள இ புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முனியாண்டி 40 இவர் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்துார் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார்.திருப்பாச்சேத்தியில் இருந்து வி.புதுக்குளம் கிராமத்திற்கு மதுரை, ராமேஸ்வரம் 4 வழி சாலையில் அன்னியேந்தல் அருகே டூவீலரில் சென்றபோது மற்றொரு டூவீலர் மோதியதில் காயமடைந்த முனியாண்டி பலியானார்.மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

News July 9, 2025

அஜித் கொலை வழக்கு – உயர்நீதிமன்றம் கண்டிப்பு

image

திருப்புவனம் அஜித்குமார் மரணம் தொடர்பாக திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என பொது வெளியில் பேசுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும், மனுதாரர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என கண்டித்துள்ளது.

error: Content is protected !!