News July 10, 2025
டிரம்ப் வரி விதிப்பு பட்டியல்.. இந்தியாவின் பெயர் இல்லை

கூடுதல் வரி விதிக்கப் போவதாக கூறி டிரம்ப் வெளியிட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. அதில், 20 நாடுகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, தெ.ஆப்பிரிக்கா, போஸ்னியா, கம்போடியா, கஜகஸ்தான், லாவோஸ், ஹெர்சிகோவினா, செர்பியா, துனிசியா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக உடன்பாடு செய்யவுள்ளது.
Similar News
News July 10, 2025
NR காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கு என்னாச்சு?

புதுச்சேரியில் ஆளும் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணி இடையே மோதல் வலுத்து வருகிறது. <<17004404>>CM ரங்கசாமியை<<>> சமாதானம் செய்யும் முயற்சி பயனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இருகட்சிகளின் முக்கியத் தலைவர்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் கூட்டணி முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்தடுத்த திருப்பங்களால் இருகட்சி தொண்டர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
News July 10, 2025
500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் intel

intel நிறுவனம் USA-ல் உள்ள ஓரிகன் அலுவலகத்தில் இருந்து 529 ஊழியர்களை நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகச் செலவை குறைக்கும் நோக்கிலும், Chip துறையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக, AI-ன் மூலம் HR வேலைகளை நிவர்த்தி செய்வதன் பொருட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்கத்தை கையிலெடுத்திருந்தது.
News July 10, 2025
பாமகவில் பதவிக்கு வரும் அடுத்த வாரிசு?

அன்புமணி – ராமதாஸ் இடையேயான அதிகாரப் போட்டியில் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அவரது சகோதரியான காந்திமதியை களமிறக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், பாமகவில் காந்திமதிக்கு பதவி வழங்கப்படுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, போகப்போக தெரியும் என ராமதாஸ் பாடல் பாடியபடி பதிலளித்துள்ளார். ஒருவேளை இருக்குமோ?