News July 9, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 9) நாமக்கல் – கோமதி ( 9790948987), ராசிபுரம் – சுரேஷ் ( 9788015452), திருச்செங்கோடு – சிவகுமார் ( 9498177601), வேலூர் – சினிவாசன் (9498176551 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
Similar News
News July 10, 2025
நாமக்கல்லில் முட்டை 20 காசு குறைவு

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையார்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று கொள்முதல் விலையில் 20 காசுகள் குறைக்கப்பட்டு 5.55 ஆக அறிவிக்கப்பட்டது.
News July 10, 2025
நாமக்கல் மக்களே இந்த லிங்க்கை தொடாதீர்கள்!

நாமக்கல்: கடந்த சில நாள்களாக ரூ.7000க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்கள்(Traffic Fines) ரத்து செய்யப்படும் என கூறி ஒரு மெசேஜ் பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்த போலி லிங்க்களை திறக்காமல் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News July 10, 2025
2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 10) நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 2001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.