News July 9, 2025

விண்ணப்பித்த உடன் குடிநீர் இணைப்பு!

image

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு பல மாதங்கள் ஆகி வந்த நிலையில், நடைமுறையை எளிதாக்கும் முயற்சியாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, இனி விண்ணப்பித்தவுடன் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகையை 10 தவணைகளாக செலுத்தலாம் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 10, 2025

தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் கவனத்திற்கு

image

சேலம் மாவட்டத்தில் தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.onlineppa.tn.gov.in இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 30/11/2025 வரை <>www.tcponline.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாகவே விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.SHAREit

News July 10, 2025

போக்குவரத்து அபராதம் ரத்து? இதை மட்டும் செஞ்சிடாதீங்க

image

சேலம்: கடந்த சில நாள்களாக ரூ.7000க்கு கீழ் உள்ள போக்குவரத்து அபராதங்கள்(Traffic Fines) ரத்து செய்யப்படும் என கூறி ஒரு மெசேஜ் பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிக்கப்படும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இந்த போலி லிங்க்களை திறக்காமல் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News July 10, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

ஜூலை 10,11,12,13 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கு-மைசூரு ரயில் (16316),கன்னியாகுமரி-திப்ரூகர் தினசரி ரயில்(22503),ஜூலை 12-ல் கன்னியாகுமரி-ஸ்ரீ வைஷ்ணவ் தேவி வாராந்திர ரயில் (16317),ஜூலை 13-ல் எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ்(22669),எர்ணாகுளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

error: Content is protected !!