News July 9, 2025
நாடு முழுவதும் நடந்த ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

நாடு முழுவதும் இன்று 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போக்குவரத்து, பள்ளிகள், வங்கிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டதால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. தெலங்கானாவில் பைக் பேரணி, கேரளாவில் பேருந்தை மறித்து போராட்டம், மும்பையில் வங்கி முன் போராட்டம், கர்நாடகாவில் பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
Similar News
News July 10, 2025
பள்ளி வேன் விபத்து… வேகமெடுக்கும் விசாரணை

தமிழகத்தை பெருந்துயரில் ஆழ்த்திய பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்து தொடர்பான விசாரணை வேகமெடுத்துள்ளது. 3 பேர் கொண்ட குழுவினர் இன்றுமுதல் விசாரணையை தொடங்கியுள்ளனர். கேட் கீப்பர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ரயில் மேலாளர், பள்ளி வேன் ஓட்டுநர் என 13 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
News July 10, 2025
நயன்தாராவை மட்டும் ஏன் இப்படி பண்றீங்க தனுஷ்?

₹4 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட ஒரு சினிமா செட்டை, விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ஷூட்டிங்கிற்கு கொடுத்துள்ளாராம் தனுஷ். அதுவும் பணம் ஏதும் வாங்காமால். முன்பு, வடசென்னை படத்திற்காக தனது போட்டி நடிகரான சிம்புவுக்கும் NOC சான்றிதழை தனுஷ் வழங்கியிருந்தார். இதுதொடர்பான தகவல் வைரலாக, ‘எங்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராகிட்ட மட்டும் ஏன் காசு கேட்குறீங்க’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News July 10, 2025
பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்

✪<<17015271>>கோவை <<>>குண்டுவெடிப்பு.. 28 ஆண்டுகள் கழித்து கைது
✪<<17013987>>அன்புமணி <<>>நீக்கம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
✪<<17013085>>நமீபியா <<>>நாடாளுமன்றத்தில் PM மோடி… உற்சாக வரவேற்பு
✪<<17013477>>ஈரான் <<>>திட்டம்: அதிபர் டிரம்ப் உயிருக்கு ஆபத்து?
✪<<17013201>>வெற்றியை <<>>தொடருமா இந்தியா?.. இன்று 3-வது டெஸ்ட் ✪<<17013334>>மீண்டும் <<>>புஷ்பா காம்போ.. அட்லீ படத்தில் ரஷ்மிகா