News July 9, 2025
PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News July 10, 2025
கோர விபத்து: ரயில்வே துறை முக்கிய உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், கேட் கீப்பர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல்பதிவுகளை கண்காணிக்க வேண்டும். அனைத்து ரெயில்வே கேட்கள், கேட் கீப்பர் அறைகளிலும் CCTV பொருத்த வேண்டும். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்டுகளில் இன்டர்லாக் சிஸ்டம் நிறுவப்படும் என 11 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
News July 10, 2025
முறைகேடு புகாரில் சிக்காத தலைவரும் ராஜினாமா!

மதுரை மாநகராட்சி 1வது மண்டல தலைவர் வாசுகியும் பதவியை ராஜினாமா செய்தார். <<16986453>>2, 3, 4, 5வது மண்டலங்களில்<<>> சொத்து வரியை குறைத்து காட்டி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனால் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய CM ஸ்டாலின் உத்தரவிட்டார். விசாரணையில் 1வது மண்டலத்தில் முறைகேடு நடக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், அவரும் ராஜினாமா செய்துள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News July 10, 2025
இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும்: தமிழிசை

வட்ட இலையுடன் தாமரை குளத்தில் மலரும், இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ‘மக்களைக் காப்போம்’ நிகழ்வு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும், அதனைப் பார்த்து திமுக பயந்திருப்பதாகவும் கூறினார். நம் நாடு நன்றாக இருக்கிறது என்றால் மோடி தான் காரணம் என்றும், அவருக்காக கோவிலில் தான் பூஜை செய்வதாகவும் தெரிவித்தார்.