News April 6, 2024

பாகிஸ்தானிற்குள் புகுந்து தீவிரவாதிகளை கொல்வோம்

image

பாகிஸ்தானிற்குள் புகுந்து தீவிரவாதிகளை, இந்தியா கொல்லும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க விரும்பினாலோ, அல்லது தாக்குதல்களை நடத்த முயற்சித்தாலோ தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். இந்தியாவில் தாக்குதல் நடத்திவிட்டு பாகிஸ்தானிற்குள் தப்பிச் செல்லும் தீவிரவாதிகளை அந்நாட்டிற்குள் புகுந்து இந்தியா கொல்லும் என்றும் அவர் கூறினார்.

Similar News

News February 1, 2026

பட்ஜெட்: புற்றுநோய் மருந்துகளுக்கு வரி இல்லை

image

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலும் நீக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல் 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்களுக்கு முற்றிலும் வரி நீக்கம் செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.

News February 1, 2026

வருமான வரி தகவலை மறைத்தால் 100% அபராதம்

image

வெளிநாட்டு சுற்றுலாவுக்கான வரிப்பிடித்தம் 2% ஆக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருமான வரி சார்ந்த தரவுகளை மறைத்தால் 100% அபராதம் விதிக்கப்படும் என்றும் மருத்துவ படிப்பு கல்வி கடனுக்கான வரி 5%-லிருந்து 2% ஆக குறைப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப தரவு மையங்களுக்கு 2047 வரை வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

News February 1, 2026

பட்ஜெட்டில் TN கேட்ட இந்த விஷயம் இல்லை

image

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 41%-ல் இருந்து 50%ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், இதனை ஏற்காத மத்திய அரசு, நிதிப் பகிர்வு விகிதம் 41%ஆக தொடரும் என மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதனால் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில அரசின் மீதான நிதிச்சுமை அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!