News July 9, 2025

சோழர் காலத்தை பறைசாற்றும் அரியலூர்!

image

சோழர் ஆட்சியில் பழுவேட்டயர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாக திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்குத் தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…

Similar News

News July 10, 2025

அரியலூர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை VAO-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க

News July 10, 2025

அரியலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் 383 பேர் கைது

image

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதிலும் போராட்டம் நடத்தினர். அந்தவகையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 383 பேரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

அரியலூர்: திருமண வரமளிக்கும் பஞ்சநதீஸ்வரர்

image

அரியலூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள குரும்பலூரில் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சபூதங்களை விளங்கும் வகையில் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சலிங்க சிலைகள் உள்ளன. மேலும் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலில் சிவன்- அம்பாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யவும்.

error: Content is protected !!