News July 9, 2025
கடன் தொல்லை நீக்கும் கால பைரவர்

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரை அருகே கால பைரவர் சன்னதி உள்ளது. இங்குள்ள பைரவர் ஒரே கல்லால் 8 கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News August 27, 2025
தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) 04175-233063 தி.மலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க*
News August 27, 2025
தி.மலை: காலாண்டு தேர்வு அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வரும் செப்.10 முதல் 25ம் தேதி வரையிலும், 6-10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்.15 முதல் 26ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 26க்கு பிறகு பள்ளி விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
News August 27, 2025
தி.மலை: உடல் வலி நீங்க இந்த கோயில் போங்க

தி.மலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் எப்போதுமே ஸ்பெஷல். வழக்கமாக தொந்தியுடன் இருக்கும் விநாயகர் இங்கு நந்தியுடன் இருக்கிறார். பிள்ளையார் கோயில் என்றாலும் இங்கே விநாயகர் சிலை இருக்காது. மூன்று வாசல்களை கொண்ட சிறிய குகை மட்டுமே உள்ளது. இந்த குகை வழியே தவழ்ந்து சென்று வெளியே வந்தால், உடல் வலிகள் நீங்கி ஆரோக்கியம் பெறலாம். விநாயகர் சதுர்த்தி நாளில் மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க. SHARE IT