News July 9, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டத்தினை இன்று துவக்கி வைத்தார்.

Similar News

News July 10, 2025

ஆடுதுறை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

image

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், கோவை தமிழ்நாடு பல்கலைக்கழகத் துடன் இணைந்து விவசாயிகளுக்கான நெல் பயிரில் உயிர் ஊக்கிகளின் பங்கு குறித்த பயிற்சி நடந்தது. நிறுவன இயக்குனர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வெளியிடப்படும் நெல் ரகங்கள் குறைந்த அளவில் உரங்கள் அளித்தாலே சராசரி மகசூல் கொடுக்கும். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கங்கள் அளித்தனர்.

News July 9, 2025

தஞ்சை: விமான நிலையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

image

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக 30,000 வரை வழங்கப்படுகிறது. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

குறுவை சாகுபடிக்காக 23,784 டன் உரம் கையிருப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 95,000 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான உரங்களான யூரியா 9,996 டன், டிஏபி 2,685 டன், பொட்டாஷ் 3,468 டன், காம்ப்ளக்ஸ் 6,094 டன், சூப்பர் பாஸ்பேட் 1,541 டன் என 23,784 டன் உரங்கள் இருப்புள்ளது மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்காக 1,227 டன் யூரியா உரம் வந்துள்ளது.

error: Content is protected !!