News July 9, 2025

கள்ளக்குறிச்சி எஸ்பி தலைமையில் குறைத் தீர்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சியில் வாராந்திர குறைத்தீர்வு கூட்டம் இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி. ராஜத் சதுர்வேதி தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள பொதுமக்கள் எஸ்.பி-யை நேரில் சந்தித்து புகார் மனுக்களை கொடுத்தனர். இதுகுறித்து உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எஸ்.பி அறிவுரைத்தனார்.

Similar News

News July 10, 2025

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், இன்று (ஜூலை 9) மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த இக்கூட்டத்தில், விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

News July 10, 2025

ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.07.2025) மாலை, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டச் செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உழவர் நலத்துறை ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் அரசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News July 10, 2025

கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (09.07.2025) இரவு 10 மணி முதல், நாளை வியாழக்கிழமை (10.07.2025) காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்டம் காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!