News July 9, 2025
புதுவை: ஆசிரியர் பட்டய படிப்புக்கு நேரடி சேர்க்கை

புதுவை மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நாளை (ஜூலை 10) நிரப்பப்படவுள்ளது. இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் +2 தேர்வில் 50% சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News August 24, 2025
புதுச்சேரியில் முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி

புதுச்சேரியில் சமீப காலங்களாக கோஷ்டி மோதலால் கொலைகள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று இன்று புதுச்சேரி சண்முகா திரையரங்கம் எதிரே பெரியார் நகரைச் சேர்ந்த லூர்து என்னும் வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்யும் நோக்குடன் தாக்கியுள்ளனர், பாதிக்கப்பட்ட நபர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News August 24, 2025
புதுச்சேரி: வங்கியில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

புதுச்சேரியில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 19 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 24, 2025
750 ஏக்கர் நிலம் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் சர்வதேச வணிக உச்சி மாநாட்டு நேற்று தொடங்கியது. இவ்விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சேதராப்பட்டு பகுதியில் கையகப்படுத்தி வைத்திருக்கும் 750 ஏக்கர் நிலத்தை 2 மாதத்தில் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யபட உள்ளதால், தொழில் தொடங்க வருவோர் புதுச்சேரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.