News July 9, 2025
IAS என்றால் கோர்ட்டை விட மேலானவரா? நீதிபதி கேள்வி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை நிறுத்திவைக்க கோரி அவர் HC-ல் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி, IAS அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என நினைத்துக் கொள்கிறாரா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். கோர்ட்டின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா என்று வினவிய அவர், ஆணையரை நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News July 10, 2025
கனிமொழி, உதயநிதி எங்கே? திருப்புவனத்தில் சீமான் கேள்வி

இளைஞர் அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனத்தில் நாதகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய சீமான், காவல் மரணமடைந்த பெனிக்ஸ், ஜெயராஜ் வீட்டுக்கு சென்ற உதயநிதியும், கனிமொழியும் ஏன் அஜித்குமார் வீட்டுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் எதிர்கட்சியாக இருந்ததால் ஜெயராஜ் வீட்டுக்கு சென்றனர். இப்போது ஆளுங்கட்சி என்பதால் அஜித்குமார் வீட்டுக்கு செல்லவில்லை என விமர்சித்தார்.
News July 10, 2025
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை அடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
News July 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: கல்வி ▶குறள் எண்: 391 ▶குறள்: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. ▶ பொருள்: ஒருவன் கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபிறகு அக்கல்விக்கேற்பத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும்.