News July 9, 2025
புதுவையில் விவசாய கூலி தொழிலாளி தற்கொலை

கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மாயவன். இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்ய முயன்ற நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
புதுவை: உண்ணாவிரதத்தை முடித்த சட்டமன்ற உறுப்பினர்

புதுச்சேரி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு ராஜினாமா கடிதத்துடன் கூடிய கோரிக்கை கடிதத்தை துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் இன்று (ஜூலை 9) வழங்கினார். மேலும் எம்எல்ஏ காலை முதல் சட்டசபையில் வாயிலில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் அவருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், ரமேஷ் உள்ளிட்டோர் முடித்து வைத்தனர்.
News July 9, 2025
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி MLA ராஜினாமா!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்கள் நடைபெற்று வந்தது. அவ்வகையில் புதுடெல்லியில் கடந்த (ஜூன் 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை MLA நேரு புதுவைக்கு தனது பதவியை இன்று (ஜூலை 9) ராஜினாமா செய்தார். மேலும் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் மற்றும் அரசு கொறடாவிடம் அவர் வழங்கினார்.
News July 9, 2025
புதுவை: ஆசிரியர் பட்டய படிப்புக்கு நேரடி சேர்க்கை

புதுவை மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நாளை (ஜூலை 10) நிரப்பப்படவுள்ளது. இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் +2 தேர்வில் 50% சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.