News July 9, 2025
வங்கியில் 2,500 காலியிடங்கள்.. ₹85,920 வரை சம்பளம்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள 2500 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 -30 வயதுக்குட்டப்பட்ட எந்த டிகிரி முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹48,480– ₹85,920 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 24-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
Similar News
News July 10, 2025
மரண தண்டனையில் இருந்து தப்ப என்ன வழி?

கொலைக் குற்றச்சாட்டில் ஏமன் சிறையில் உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு வரும் <<16997656>>16-ம் தேதி மரண தண்டனை<<>> நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், கொலையானவரின் குடும்பத்தினர் மன்னிப்பு அளித்தால் மட்டுமே இவர் உயிர் பிழைக்கலாம். இதற்காக கொலையானவரின் சகோதரருக்கு இழப்பீடாக 1 மில்லியன் டாலர் பணம், சவுதி (அ) UAE-யில் நிரந்தர வசிப்பிடம் வழங்க மனித உரிமை அமைப்புகள் இந்திய அரசு உதவியுடன் முயற்சித்து வருகின்றன.
News July 10, 2025
டிரம்ப் வரி விதிப்பு பட்டியல்.. இந்தியாவின் பெயர் இல்லை

கூடுதல் வரி விதிக்கப் போவதாக கூறி டிரம்ப் வெளியிட்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. அதில், 20 நாடுகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, தெ.ஆப்பிரிக்கா, போஸ்னியா, கம்போடியா, கஜகஸ்தான், லாவோஸ், ஹெர்சிகோவினா, செர்பியா, துனிசியா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக உடன்பாடு செய்யவுள்ளது.
News July 10, 2025
மகிழ்ச்சிக்கு 5 நிமிடங்கள்

தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.