News July 9, 2025
திண்டுக்கல் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/ சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ அல்லது www.bcmbcmw.tngov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
திண்டுக்கல்லில் தொழில் முன்னோடிகள் திட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயனடைய https://www.msmetamilnadu.tn.gov.in/aabcs என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மாவட்ட தொழில் மையத்தை 8925533943 தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
திண்டுக்கல்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://tnvelaivaaippu.gov.in (அ) www.Invelaivaaippu.gov.in இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.
News July 9, 2025
திண்டுக்கல்: கள்ளக்காதலால் அரிவாள் தூக்கிய அண்ணன்!

திண்டுக்கல்: பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன்கள் பவித்ரன்(30), ஹரிஹரன்(26). இந்நிலையில் கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணன் பவித்ரன் தம்பி ஹரிஹரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.