News July 9, 2025

தேனி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மதுரையில் நடைபெற உள்ளது. இந்த தகவலை இப்போதே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

Similar News

News August 25, 2025

தேனியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News August 25, 2025

தேனியில் ஆக.28 முதல் செப்.29 வரை மிஸ் பண்ணிடாதீங்க

image

தேனியில் உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கொத்தனார் பயிற்சி ஆக.28 முதல் செப்.29 வரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.சுய தொழில செய்ய விரும்புவோருக்கு SHARE செய்யவும்.

News August 25, 2025

உத்தமபாளையம்: திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த அனந்தராமன் என்பவரது நர்சரி கார்டனில் நிறுத்தியிருந்த பிக்கப் வேன், இரும்பு தளவாட சாமான்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் சிலர் ஆக.21 அன்று திருடி சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் திருட்டில் ஈடுபட்ட சிரஞ்சீவி, ஸ்டாலின், ராஜ்குமார் ஆகியோரை நேற்று (ஆக.24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!