News July 9, 2025
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கடைபிடிக்கும் 10 ஊராட்சிகளை ஊக்குவித்து தமிழக அரசு சமூக நல்லிணக்க விருதுடன் தலா 1 கோடி ரூபாய் வழங்க உள்ளது. சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோர் https://tinyurl.com/Panchayataward என்ற இணையதளத்தில் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
வளமான வாழ்வு பெற கேரளபுரம் விநாயகரை வழிபடுங்க!

புதன் அன்று வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். நமது கன்னியாகுமரி மாவட்டம், கேரளபுரத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக விநாயகர் அருள்பாலிக்கிறார். தை – ஆனி மாதத்தில் வெள்ளை நிறத்திலும், ஆடி – மார்கழி வரை கருப்பு நிறத்திலும் விநாயகர் நமக்கு காட்சியளிப்பார். கேரளபுரம் விநாயகரை மனதார பிரார்த்தனை செய்தால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கொடுக்கும் அற்புத திருத்தலம். SHARE பண்ணுங்க!
News July 9, 2025
ரெஜிமோன் மத போதகர் குறித்து Whatsappல் புகார் அளிக்கலாம்

கன்னியாகுமரி, தக்கலை அருகே 26 வயது இளம்பெண் ஒருவர் ஜெபக்கூடத்திற்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ரெஜிமோன் என்பவர் கைது செய்யபட்டுள்ளார். போதகர் மீது வழக்கு பதிவு செய்யபட்ட நிலையில் வேறு யாராவது பாதிக்கபட்டிருந்தால் பெண்கள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க தேவையில்லை மாவட்ட எஸ்பி whatsapp எண்ணுக்கு 8122223319 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
News July 9, 2025
விவேக் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்

இருகூர், பீளமேடு பிரிவில் சாலை மேம்பால பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 9, 10, 11, 12 தேதிகளில் புறப்படுவது போத்தனூர் வழியாக செல்லும். இருகூர் மற்றும் கோயம்புத்தூர் செல்லாது. போத்தனூரில் கூடுதல் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.