News July 9, 2025
சேலம் ஜூலை 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஜூலை 9 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 9 மணி டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய மருத்துவ சங்கத்தினர் 5 ரோட்டில் ஆர்ப்பாட்டம்▶️ காலை 10 மணி 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் ▶️காலை 11 மணி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம்
Similar News
News November 13, 2025
வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஆட்சியர் அறிவுறுத்தல்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த பணிகள் -2026 கணக்கெடுப்பு படிவத்தினை பெற்ற வாக்காளர்கள் தங்கள் படிவத்தினை தாமதமின்றி பூர்த்தி செய்து வழங்கி சிறப்பு தீவிரத் திருத்த பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியருமான பிருந்தாதேவி அறிவுறுத்திள்ளார். மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்தம் தொடர்பாக சந்தேகம் இருந்தால் 1950 என்ற எணுக்கு அழைக்கவும்.
News November 13, 2025
இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு!

சேலம் மாவட்டத்தில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு நவம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுத உள்ளதாகவும் 104 மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்பார்கள் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News November 13, 2025
சேலம்: ஆதிதிராவிடர் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கிகரிக்கப்பட நிறுவனம் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த தாட்கோ மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 23 வயதிற்குட்பட்டவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது கல்லூரி தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com பதிவு பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.


