News July 9, 2025
Drug Test: இந்தியாவின் Ex. உலக சாம்பியனுக்கு ஒரு வருடம் தடை!

இந்தியா மல்யுத்த வீராங்கனை ரித்திகா ஹூடா(22) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 17 முதல் நடைபெறவுள்ள Ranking Series tournament, & செப்டம்பரில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2023-ல் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பை ரித்திகா வென்றிருந்தார்.
Similar News
News September 11, 2025
7,000 கைதிகள் தப்பினர்

நேபாளத்தில் சுமார் 7 ஆயிரம் கைதிகள் சிறைகளில் இருந்து தப்பியுள்ளனர். அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல சிறைகளில் இருந்து 7 ஆயிரம் கைதிகள் தப்பியுள்ளனர். அதில் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி செய்திருக்கின்றனர். உ.பி எல்லையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு ராணுவம் அதிகாரத்தை கையிலெடுத்துள்ளதால் இயல்பு நிலை திரும்புகிறது.
News September 11, 2025
ஜனாதிபதி ஆகி இருப்பேன்: ராமதாஸ்

தான் நினைத்திருந்தால் ஜனாதிபதி ஆகியிருக்க முடியும் என ராமதாஸ் கூறியுள்ளார். எல்லா பிரதமர்களும் தனது நண்பர்கள் என்றும் PM மோடி தமிழகம் வந்தால் தன்னை கட்டியணைத்துக் கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என குறிப்பிட்ட ராமதாஸ், தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம் என்றார்.
News September 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 455 ▶குறள்: மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். ▶பொருள்: மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.