News July 9, 2025

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு

image

குளச்சல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாலையில் அப்பகுதியில் உள்ள டைப்ரைட்டிங் பயிற்சி செல்லும்போது அங்கு திருமணமான வாலிபரான தனிஷ்(25) என்பவரிடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் தனிஷ் மாணவியை அருகில் உள்ள தோப்பில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் படி குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் தலைமறைவான தனிஷை தேடி வருகின்றனர்.

Similar News

News July 9, 2025

ரெஜிமோன் மத போதகர் குறித்து Whatsappல் புகார் அளிக்கலாம்

image

கன்னியாகுமரி, தக்கலை அருகே 26 வயது இளம்பெண் ஒருவர் ஜெபக்கூடத்திற்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக மத போதகர் ரெஜிமோன் என்பவர் கைது செய்யபட்டுள்ளார். போதகர் மீது வழக்கு பதிவு செய்யபட்ட நிலையில் வேறு யாராவது பாதிக்கபட்டிருந்தால் பெண்கள் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க தேவையில்லை மாவட்ட எஸ்பி whatsapp எண்ணுக்கு 8122223319 இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.

News July 9, 2025

விவேக் எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்

image

இருகூர், பீளமேடு பிரிவில் சாலை மேம்பால பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி – திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் இருந்து ஜூலை 9, 10, 11, 12 தேதிகளில் புறப்படுவது போத்தனூர் வழியாக செல்லும். இருகூர் மற்றும் கோயம்புத்தூர் செல்லாது. போத்தனூரில் கூடுதல் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News July 9, 2025

குமரி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!